Montag, Februar 12, 2007

வலைப்பதிவு அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம்.

இது விக்ரோறிய மாநிலம் (அவுஸ்திரேலியா) தொடர்பான சில தகவல்களையும் படங்களையும் பகிர்ந்துகொள்ள நிறுவப்பட்ட வலைப்பதிவு.
விக்ரோறிய மாநிலம் என்று இருந்தாலும் தொடக்கத்தில் மெல்பேர்ண் நகரை மையப்படுத்தியதாகவே பதிவுகள் இருக்கும்.
பின்னர் விரிவுபடுத்தப்படும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவுஸ்திரேலியாவுக்கென்று தனியொரு வலைப்பதிவு தொடங்கியிருக்கார்கள்.
ஓர் அமைப்பின் தலைவன் என்ற முறையில் ஒருவார்த்தை கேட்கவில்லையென்பதை விட்டுவிடுவோம்.
எட! ஒரேநாட்டில் இருப்பவன் என்ற முறையிலாவது ஒருசொல்லுச் சொல்லியிருக்கலாமே?
வலைப்பதிவுக் கூட்டணியிலும் எமக்குப் பங்கில்லை.

ஒரேநாடு என்ற கோட்பாடு இங்கு அடிபட்டுப் போகிறது.
இவர்களில் செல்லியைத் தவிர மிகுதிப்பேர் நியு சவுத் வேல்ஸ்.
இவர்கள் எழுதப்போவதும் அதைப்பற்றித்தான்.
இவர்களின் பதிவுகளாலும் செல்லியின் சாப்பாட்டுப் பதிவுகளாலும் கவரப்பட்டு வரும் உல்லாசப்பயணிகள் போகப்போவது என்னவோ இவர்களின் இடங்களுக்கு மட்டும்தான்.
உல்லாசப்பயணத்துறையில் தாங்கள் மட்டும் கொள்ளை இலாபம் அடித்துக்கொண்டு மற்றவர்களை ஓரங்கட்டும் நயவஞ்சகப்புத்தியை நாம் தொடக்கத்திலேயே இனங்கண்டுகொண்டோம்.

அதை முறியடிக்கக் களமிறங்கிவிட்டோம்.

கூட்டாட்சி தத்துவமெல்லாம் இனி சரிவராது.
தன்னாட்சி வேண்டும்.

எனவே இந்த வலைப்பதிவு, அவுஸ்திரேலியாவின் அங்கமாக இருந்தும் நயவஞ்சகமாக உரிய மரியாதை மறுக்கப்பட்ட விக்ரோறிய மாநிலத்தைப் பிரபலப்படுத்தும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இங்குக் கூட்டணி இல்லை.
பிரபலமான பொன்மொழியொன்றை கோடம்பாக்கம் தமிழுக்குத் தந்துள்ளது.
"பன்றிகள்தான் கூட்டமாக வரும்;
சிங்கம் எப்போதும் தனியாத்தான் வரும்"
நான் சிங்கம்.

இன்னொரு பொன்மொழியுமுண்டு.
"ஓருறையில் ஒரு கத்தி"
இந்த மெல்பேர்ண் உறையிலும் ஒரே கத்தி.
முன்பிருந்த கத்தியைக் கூடக் கலைத்தாயிற்று.
பின்வந்த கத்தியொன்றையும் உறையிலிருந்து எறிந்தாயிற்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னென்ன பார்க்கலாமெண்டதையும் என்னென்ன பார்க்கக் கூடாதென்பதையும் தொடரும் பதிவுகளில் தருகிறேன்.


1 Kommentare:

hat gesagt…

ஐரோப்பிய வலைப்பதிவர் பேரவையில் ஏகோபித்த ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்
தல
EBO